Advertisment

‘தளபதி 63’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா அப்டேட்...

வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருடா வருடம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அன்று விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 63 குழு சார்பில் பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

archana kalpathi

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து தற்போது பணிபுரிந்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் கடைசிகட்ட ஷூட்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், படத்தின் பெயர் கூட என்ன என்று அறிவிக்காமல் இருக்கிறது படக்குழு. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

Advertisment

அதில் , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கேட்பேன் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்கள். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகதான் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கின்றோம்” என்று அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

thalapathy 63 archana kalpathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe