archana

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இந்தப் படம் அக்டோபர் 30 -ஆம் தேதி அமேசான் ப்ரைமில் உலகமெங்கும் ரிலீஸாகிறது.

Advertisment

இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா அஜித்தை வைத்து இயக்கப்போகிறார். அந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Advertisment

இந்நிலையில் இதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "2020 -ஆம் ஆண்டில் நாங்கள் எந்தத் திரைப்படத்துக்காகவும் ஒப்பந்தம் போடவில்லை. சில பொய்யான செய்திகளைப் பார்க்க நேர்ந்தது. அதனால் ஏ.ஜி.எஸ் சார்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். யாரையும் நாங்கள் சந்திக்கவோ, உரையாடவோ இல்லை. இந்தக் கரோனா நெருக்கடி முடியக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.