Advertisment

கள்ளப்பார்ட் ஆக மாறும் அரவிந்த்சாமி; வெளியான ரிலீஸ் தேதி

Aravindsamy film released after long days; The film crew released the release date

அரவிந்த்சாமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தலைவி'. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீனா மற்றும் பார்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள 'கள்ளபார்ட்' படத்தில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார். ராஜபாண்டியன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே முடிவுற்ற நிலையில், சில காரணங்களால் இப்படம் வெளியாகாமல் இருந்தது.

Advertisment

இந்நிலையில் 'கள்ளபார்ட்' படத்தின் ரிலீஸ் மற்றும் சென்ஸார் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்ஸார் போர்ட்இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேபோல, இப்படம் ஜூன் மாதம் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் எனத் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

aravind swamy kallapart movie Regina Cassendra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe