Advertisment

மாறுபட்ட கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி ; டீசரை வெளியிட்ட படக்குழு

Aravindsamy in a different role; The crew that released the teaser

அரவிந்த்சாமி, கடந்த ஆண்டு வெளியான 'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சீனா மற்றும் பார்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள 'கள்ளபார்ட்' படத்தில் கதாநாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார். ராஜபாண்டியன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'கள்ளபார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அரவிந்த் சாமி இப்படத்தில் சக்கர நாற்காலியில் வரும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் வெளிவந்திருக்கும் இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

kallapart movie Regina Cassendra aravind swamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe