style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரவிந்த் சாமி நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்', 'சதுரங்க வேட்டை 2', 'நரகாசூரன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் இவர் தற்போது தன் நீண்ட நாள் நண்பரும் 'புதையல்' பட இயக்குனருமான செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமி அடுத்தாக 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய திகில் படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கயுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. மேலும் படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});