/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_51.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கிச்சா சுதீப்பை வெங்கட் பிரபு சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் பரவின. பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவே கிச்சா சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’ என்ற வெற்றிப் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)