Advertisment

'எம்.ஜி.ஆர். தோற்றம்'... மேக்கப் கலைஞருக்கு நன்றி தெரிவித்து அரவிந்த் சாமி உருக்கமான பதிவு!

arvind swami

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இப்படத்திற்கு 'தலைவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். கரோனா நெருக்கடி நிலை தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், கங்கனா ரணாவத்தின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது அரவிந்த் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தலைவி படத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்ட அரவிந்த் சாமி, தனக்கு எம்.ஜி.ஆர் தோற்றத்திற்கான ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞர் ரஷித்துக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், "புரட்சித்தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு நெருக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு நெருக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது வித்தையை, கடைசி முறையாக இப்படப்பிடிப்பில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார். தலைவி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

aravind swamy thalaivi
இதையும் படியுங்கள்
Subscribe