/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_68.jpg)
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் ட்ரைலர்வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் பொங்கலை முன்னிட்டு வருகிற 11 ஆம்தேதி உலகெங்கும்உள்ளதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஏகே 62' படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்திலும்சந்தானம் முக்கியக் கதாபாத்திரத்திலும்நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில்தீயாய் பரவி வருகிறது.
'தனி ஒருவன்' படத்தின் மூலம் வில்லனாகரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், அப்படங்கள் பலவும் ரிலீசாகாமல் கிடப்பில் உள்ளன. இதனால்மீண்டும் தனது கவனத்தை வில்லன் கதாபாத்திரம் பக்கம் அரவிந்த்சாமி செலுத்தவுள்ளதாகத்தெரிகிறது. அந்த வகையில், இப்போது மீண்டும்வில்லனாக நடிக்கவுள்ளதாகத்தெரிகிறது. இதற்கு முன்னதாக அரவிந்த்சாமியும் அஜித்தும்ஒரே படத்தில் நடித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'பாசமலர்கள்' படத்தில் அஜித் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது 'ஏகே 62' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகத்தெரிகிறது.
சந்தானம்ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய பிறகு மற்ற படங்களில் நடிப்பதைத்தவிர்த்து வந்தார். ஆனால், 'ஏகே 62' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இத்தகவல் ரசிகர்களைச் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஹீரோவிலிருந்துதிரும்பவும்தனது கவனத்தைத்திருப்பியுள்ளாராஎன்ற கேள்வியைஎழுப்புகிறது. இதுகுறித்துபடக்குழுவும்சந்தானமும் விரைவில் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு பட ரிலீசுக்கு பிறகு'ஏகே 62' பட அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாகதிரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)