Advertisment

முடிவடையும் தருவாயில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் 'கள்ளபார்ட்'

aravind swamy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி, ரெஜினா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. மேலும் அரவிந்த்சாமி, ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பகுதி அங்கு படமாக்கப்பட்டது. மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.

Advertisment

aravindswami
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe