/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault-13.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாககாதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)