/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/204_15.jpg)
சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும்சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால்அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.
'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 'அரண்மனை 4' படத்தில் சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியுள்ளதாகவும் அதற்கு பதில் சுந்தர்.சி மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 'அரண்மனை 4' படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். முன்பாக 'ஆக்ஷன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமன்னாதற்போது ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)