sundar c

'அரண்மனை' மற்றும் 'அரண்மனை -2' என்று தொடர்ந்து இரண்டு பேய்ப் படங்களை இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி. விமர்சன ரீதியாக பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வரவேற்கப்பட்டது.

Advertisment

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக ஆர்யாவை வைத்து இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத் ராஜ்கோட் அரண்மனையில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.

இந்தநிலையில் ஊரடங்கில் படப்பிடிப்புக்கு தளர்வுகளுடன் அரசு அனுமதித்தாலும் ஆயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் நிலைமை சீராகும் வரை இப்படத்தைத் தள்ளிவைக்க சுந்தர் சி, முடிவுசெய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகிறது. சுந்தர்.சி தரப்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisment