Advertisment

'அரண்மனை 3' படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி வெளியீடு குறித்து வெளியான புதிய தகவல்!

Advertisment

Aranmanai 3

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4bed008b-7cd2-49c3-a0a2-55992ea2bc08" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_26.jpg" />

இப்படம் உலகம் முழுவதும் நாளை (14.10.2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அரண்மனை 3’ படத்தின் ஓடிடி உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு உரிமைகளும் கடந்த பாகங்களைவிட பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sundar c
இதையும் படியுங்கள்
Subscribe