ADVERTISEMENT

ஓடிடியில் புதிய சாதனை படைத்த ‘அரண்மனை 3’

10:54 AM Dec 03, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் ஒன்றான ஜீ 5 தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்துவருகிறது. தமிழில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் வரிசையில், ஆர்யா, ராஷி கண்ணாவுடன் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய ‘அரண்மனை 3’ திரைப்படம், 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘கேப்டன்’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT