ஓடிடியில் புதிய சாதனை படைத்த ‘அரண்மனை 3’

aranmanai 3 movie create new record  OTT platform

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் ஒன்றான ஜீ 5 தளத்தில் பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்துவருகிறது. தமிழில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7cd6b142-38a6-48e8-bde6-0670832b145a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_35.jpg" />

அதன் வரிசையில், ஆர்யா,ராஷி கண்ணாவுடன்சுந்தர்சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம்திரையரங்கில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய ‘அரண்மனை 3’ திரைப்படம்,12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துநடிகர் ஆர்யா, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘கேப்டன்’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Actor Arya Aranmanai 3
இதையும் படியுங்கள்
Subscribe