aram movie director gopi nainar next movie announced

தமிழில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது. இன்று (21.12.2022) ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இப்படத்தை இயக்க வெற்றிமாறன் தயாரிக்கிறார். 'மனுசி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரிக்க ஆண்ட்ரியா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.