அறம் 2 வில் யார் முன்னணி நடிகை? குழப்பத்தில் படக்குழு...

கடந்த 2017ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் என்ற படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவே நல்ல வரவேற்பை பெற்றது.

samantha

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இதிலும் நயன்தாராவே நடிக்க கூடும் என்று சொல்லப்பட்டது. இந்த படத்துக்கு முன்பாகவே ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கோபி நயினார் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் நயன்தாராவின் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், வேறு ஒரு முன்னணி நடிகையை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனால் சமந்தாவிடம் இந்த படம் குறித்த கதை சொல்லப்பட்டதாகவும், அந்த கதை சமந்தாவிற்கு பிடித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால், சமந்தாவிடமும் தேதிகள் இல்லாததால் தற்போது யாரை நடிக்க வைக்கப்போவது என்று தெரியாமல் உள்ளது படக்குழு.

aram 2 Nayanthara samantha
இதையும் படியுங்கள்
Subscribe