
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.236 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் 'அரபிக்குத்து' லிரிக் வீடியோ பாடல் யூ-டியூபில் சாதனை படைத்துள்ளது. இப்பாடலை தற்போது வரை 500 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் 'அரபிக்குத்து' பாடலின் வீடியோ தற்போது வரை 373 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.