Advertisment

“ரஜினிகாந்துடன் என்னுடைய முதல் படம்” - ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி

ar rahman wishes muthu team for re release

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

Advertisment

இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரீ ரிலீஸாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரீ ரிலீஸ் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரஜினிகாந்த் சாருடன் என்னுடைய முதல் படம். 4கே மற்றும் 5.1 தரத்துடன் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடப்படுகிறது. வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Actor Rajinikanth ar rahman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe