Advertisment

"உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே" - ஏ.ஆர் ரஹ்மான்

ar rahman visit rajasthan

Advertisment

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும்சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அடிக்கடி ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர்தர்காவுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகளின் திருமணத்திற்கு பிறகு தற்போது மனைவி சாய்ரா பானுவுடன் ராஜஸ்தான் சென்று அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தஏ.ஆர் ரஹ்மான், "இருள்நீக்கும் அன்பின் பேர் ஒளியேநிழலாகும் கருணை கடலேஉன் பாதம் சேரும் வரைவாழ்க்கை என்பதொருகனவு தானே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Rajasthan ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe