Advertisment

"காதலிக்கிறவங்க இதயத்துடிப்புக்கு ஒரு இசை இருக்கு" - தனுஷ் படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் 

ar rahman tweet about dhanushs Galatta Kalyaanam movie

Advertisment

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1bff1820-3b27-485e-b63c-09c51465c0ac" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_46.jpg" />

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் தமிழ், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. 'அத்ரங்கி ரே' என்ற படத்தின்தலைப்பை தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்று படக்குழு வைத்துள்ளது. துறுதுறுப்பான இளைஞனாக தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர்இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரைலரைப் பகிர்ந்து, "காதலிக்கிறவங்க இதய துடிப்புக்கு ஒரு இசை இருக்கு” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

‘அத்ரங்கி ரே' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர்தற்போது யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

actor dhanush ar rahman Galatta Kalyaanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe