ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.'அத்ரங்கி ரே' படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘கலாட்டா கல்யாணம்’ என்று படக்குழு பெயர் வைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர், பாடல்கள்ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "கனவுலகப் பாதையுடன் ஆத்மார்த்தமான இசை இணையும்போது, அதுவே எல்லாமுமாகிறது" எனக்குறிப்பிட்டு ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் ‘மன்னார்குடி..’ என்ற பாடல் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.