முதலாமாண்டு நினைவு தினம்... தாயை நினைத்து உருகிய ஏ.ஆர் ரஹ்மான்!

AR Rahman tribute video his mother her first death anniversary

பிரபல இசையமைப்பாளரானஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்தஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணிஇசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="07cc398d-a355-4c09-8965-74ad54127d1d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_9.jpg" />

சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை காலமாகிவிட்டதால், தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.இந்நிலையில் அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி வீடியோ ஒன்றைநேற்று (28.12.2021)தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இவரின் இந்த உருக்கமான வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe