"வேறு மொழி படங்கள் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்" - ஏ.ஆர் ரஹ்மான் 

ar rahman talk about ponniyin selvan movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில்ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர் ரஹ்மான், "பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும்வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். ஏனென்றால்நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளபொன்னியின் செல்வன் படம் மிகவும் தரமாக உள்ளது" எனது தெரிவித்துள்ளார்.

ar rahman maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe