ar rahman take a video a foreign girl singing tamil song

இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.இந்தியாவைத்தாண்டி உலகளவிலும் இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாட்டில், ஒரு ரசிகை ஏ.ஆர். ரஹ்மானிடம் பாடல் பாடும் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மானிடம் ஒரு ரசிகை, உங்களின் தீவிர ரசிகர் என்று கூறிஉங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா எனக் கேட்கிறார். ஆம் என்றவுடன், வந்தே மாதரம் பாடலைப் பாடி காண்பிக்கிறார். உடனே அதை தனது ஃபோனில் வீடியோ எடுக்கிறார். அதுவும் இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவை அந்த ரசிகை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அதை ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்இசையில் அயலான் படம் நேற்று வெளியாகியுள்ளது. மேலும் லால் சலாம் படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தவிர்த்து தக் லைஃப், ராம் சரணின் புதுப்படம் எனப் பல இந்திய மொழிகளில் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.