Skip to main content

"இது வெறும் பெயரல்ல..." - கனடாவில் கிடைத்த கௌரவத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் அறிக்கை

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 AR Rahman street named in markham, Canada .

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் இதுவரை 145 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இவர் இன்றைய தலைமுறையினருக்கும் ஃபேவரட் இசையமைப்பாளராக உள்ளார். இந்திய மொழிகளை தாண்டி பல மொழிகளில் பணியாற்றிவரும் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'வெந்து தணிந்தது காடு', உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30-ஆம் தேதியும், 'கோப்ரா' வருகிற 31-ஆம் தேதியும், 'வெந்து தணிந்தது காடு' செப்டம்பர் 15-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.    

இந்நிலையில் கனடா நாட்டில், ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், மர்காம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். அந்த அறிக்கையில், "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கடவுளின் குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்." என குறிப்பிட்டு பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதே போல் கடந்த 2013-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு 'அல்லா-ரக்கா ரஹ்மான்' என்ற பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.