கடந்த2009 அபிஷேக்மற்றும் சோனம் கபூர்ஆகியோர்நடிப்பில் வெளியானபடம் 'டெல்லி6'. இந்த படத்தைஓம் பிரகாஷ்இயக்கஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலிஎன்ற பாடல் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிட் அடித்தது.
இந்த படத்திலுள்ள கேந்தாபூல்என்ற பாடலை பாட்ஷாஎன்ற இசையமைப்பாளர் ரீமேக் செய்து டி சீரிஸ்யூட்யூப்சேனலில் வெளியிட, அதுவும்செம ஹிட் அடித்தது. அதேபோலமசக்கலிபாடலையும் ரீமேக் செய்து இன்று வெளியிட்டுள்ளது டி-சீரிஸ். இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.
மசக்கலிபாடலைரீமேக் செய்து அதை கேவலப்படுத்திவிட்டார்கள், இந்த வெர்ஷனைரிலீஸ் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது. இதனால் ட்விட்டரில் மசக்கலி2.0 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி உள்ளது.