துருவ் விக்ரம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

ar rahman to score music for dhruv vikram ganesh movie

விக்ரமின் மகன் துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம்மூலம் அறிமுகமான நிலையில் விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் மாரி செல்வராஜ்மாமன்னன், வாழை என பிசியாகி விட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் தற்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வாழை படத்தை எடுத்து முடித்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் படத்தை முடித்துவிட்டு 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. கணேஷ் கே. பாபு, லைகா தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். அந்த படத்தில் தான்துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

ar rahman dhruv vikram
இதையும் படியுங்கள்
Subscribe