Advertisment

இசைப் புயலுடன் கிரிக்கெட் புயல்; வைரலாகும் புகைப்படம்

ar rahman with sachin tendulkar photos goes viral

Advertisment

இசைப் புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார். தமிழில் இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் வசூலில் ரூ.500 கோடியை நெருங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழில் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சினை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து, "மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன்" எனக் குறிப்பிட்டு நண்பர்களின் இலக்கு என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இருக்கும் இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சச்சின், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலகத்தொடர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். இந்திய அணியை வழி நடத்தியதோடு அந்தத்தொடரை வென்று கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sachin Tendulkar ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe