உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் வீட்டிலேயே இருந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் உலக பூமி தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசையமைத்த ‘ஹேண்ட்ஸ் அரெளண்ட் த வேர்ல்ட்' என்ற இசை ஆல்பத்தின் ட்ரைலரை வெளியிட்டார். கென் கிரேகன் தலைமையில் உருவான இந்த இசை ஆல்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடாஷா பெண்டிங்ஃபீல்டு, கோடி சிம்ப்சன், ஒபேரா இசைக் கலைஞர் ஜோனதன் சிலியோ ஃபரோ, எரிக்கா அட்கின்ஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர். இந்த பாடல் தற்போது உலகம் முழுவதும் ஹிட்டாகி வைரலாகி வருகிறது.