Advertisment

மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர். ரஹ்மான் - வீடியோ வைரல்

ar rahman recreate troll video

Advertisment

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்தஇப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் சாயிஷா நடனத்தில் இடம்பெற்ற 'ராவடி' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடலைப் பாடியது குறித்து காமெடியாக ஒரு யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சினேகன் பாடகியை கவனித்துக் கொண்டிருக்கையில் பாடகி வார்த்தையைத்தவறாகப் பாடியிருப்பது போல் அமைந்திருந்தது.

அந்த வீடியோவை உண்மையிலேயேஏ.ஆர். ரஹ்மான், சினேகன் மற்றும் பாடகி சுபா ஆகியோர் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

pathu thala snehan ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe