style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியபோது.... நான் வேலை செய்த ஹீரோக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் ரஜினிகாந்த் தான். அவரைப் போன்ற ஒரு சுறுசுறுப்பான மனிதரை நான் பார்த்ததே இல்லை. ஒருமுறை எனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்துவிட்டோம். வயதும் நாற்பதை தாண்டி விட்டது, இனி இசைத்துறை வேண்டாம், ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். மேலும் 40 வயது என்பது பெரிய வயது கிடையாது. இருந்தாலும் நான் பதினோரு வயதில் இருந்து வேலை செய்வதால் எனக்கு 40 வயது பெரிதாகப் பட்டது/ அப்போது ஒரு நாள் எனக்கு மிகவும் டயர்டாக இருந்த காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அப்போது அங்கே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வயதிலும் கேமராவிற்கு முன்னும் பின்னும் அவர் இருந்ததை கண்டு மிகவும் வியந்து என் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டேன். இந்த வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் இவ்வளவு சுறுசுறுப்பாக தன் முதல் படம் போல் எண்ணி வேலை செய்வதை பார்த்தால் மிகவும் வியப்பாக உள்ளது" என்றார்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/r7PB1rcVQqM.jpg?itok=uDRJg-E7","video_url":"