
அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகியா மூன்று நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் 'நோ லேண்ட்ஸ் மேன்'. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் சேர்ந்துள்ளனர்.
பிரபல வங்கதேச இயக்குனர் முஸ்தஃபா சர்வார் ஃபரூகீ இயக்கும் இந்தப் படத்தில் நவாஸுதீன் சித்திக் நாயகனாக நடிக்கிறார். அமெரிக்காவில் பயணப்படும் ஒரு தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியப் பெண் ஒருவரைச் சந்திக்கிறார்.
இதனால் அவரது பயணம் இன்னும் சிக்கலாகிறது. இதுவே படத்தின் கதைக் கரு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
முன்னதாக 2014-ஆம் ஆண்டே இந்தத் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஆசிய பசிஃபிக் ஸ்க்ரீன் விருதுகளின் திரைக்கதை மேம்பாட்டு நிதி கிடைத்தது. மேலும் அந்த வருடம் இந்தியத் திரைப்பட சந்தைப் பிரிவில் சிறந்த திரைக்கதையாகவும் தேர்வானது. அமெரிக்காவின் டயலெக்டிக், வங்கதேசத்தின் சாபியல், இந்தியாவின் மேஜிக் இஃப் ஃபிலிம்ஸ் ஆகியோருடன் சேர்ந்து தற்போது ரஹ்மானும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.