Advertisment

சர்வதேச அரங்கில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு அங்கீகாரம்

AR Rahman Praise at 43 Cairo International Film Festival

Advertisment

கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குநர்மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகஅறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தனதுமுதல் படத்திலேயே இசை ரசிகர்களை கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, காதலன் முதல்வன், எந்திரன், ஐ, சர்க்கார், பிகில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மொழியைத்தாண்டி தெலுங்கு, இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சர்வதேச திரைப்படவிழாவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த ஏ.ஆர் ரஹ்மான் "ஸ்லம் டாக்மில்லினியர்" என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தற்காகசினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="081759f6-caa3-4bc9-bd78-92d95152cc83" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_6.jpg" />

Advertisment

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு சர்வதேச அளவில் மீண்டும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எகிப்துநாட்டில் நடைபெறும் 43வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா மற்றும் இசைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ஏ.ஆர் ரஹ்மானை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலைதனது சமூகவலைத்தளபக்கத்தில் பகிர்ந்தஅவர் எல்லா புகழும் இறைவனுக்கே என்று குறிப்பிட்டுள்ளார்.

43 Cairo International Film Festival ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe