ar rahman prabhu deva movie update

Advertisment

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார்.

ar rahman prabhu deva movie update

Advertisment

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதானஎதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது.