Advertisment

ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன குட் நியூஸ்

ar rahman next concert in chennai

Advertisment

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

படங்களைத் தாண்டி பல நாடுகளிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வெளிநாடுகளில் அவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் அவரது அடுத்த இசைக் கச்சேரி சென்னையில் நடக்கவுள்ளது. 'மறக்குமா நெஞ்சும்' என்ற தலைப்பில் நடக்கவுள்ள இக்கச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் சிட்டியில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், "இந்த நல்ல செய்தியை உங்களிடம் சொல்ல நீண்ட காலமாக காத்திருந்தேன். எனது சொந்த இல்லமான சென்னையில் பாடவுள்ளேன்" எனக் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.

Advertisment

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe