Advertisment

''சென்னையில் ஆகாயத்தை இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததே இல்லை!'' - ஏ.ஆர்.ரஹ்மான்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில் ஊரடங்கில் மக்கள் நிலைமை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

vv

''நமக்கு எப்போதையும் விட இப்போது பச்சாதாப உணர்வு தேவை. சமூகத்தில் பின்தங்கிய மக்களை இரக்கத்துடன் பார்க்க வேண்டும். அவர்களைத் தேடிப்பிடித்து உதவ வேண்டும். அதுதான் மனிதம். நாம் செய்வதுதான் நமக்குக் கிடைக்கும். வெளியே அமைதியாகத் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுது கொண்டிருக்கின்றனர். உணவு தருவது, மருத்துவ உதவி போன்ற எளிமையான விஷயங்கள் கூட நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த துயரத்திலிருந்து மீள விரைவில் நமக்கு மருந்து கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம். நாமும் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சென்னையில் ஆகாயத்தை இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததே இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ள புகைப்படமும் எடுத்துள்ளேன். நாம் நமது நகரங்களை நாம் எப்படிக் கட்டமைக்கிறோம் என்பது பற்றி நாம் மீண்டும் சிந்திக்க இது உதவும் என்று நினைக்கிறேன்" என்றார்.

ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe