Advertisment

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மரணம்!

AR Rahman

Advertisment

பிரபல இசையமைப்பாளரானஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்தஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணிஇசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.

சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை காலமாகிவிட்டதால், தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். இந்தநிலையில், கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe