ar rahman  Moopilla Thamizhe Thaaye album song goes

Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த வெள்ளிக்கிழமை மாஜா யூ ட்யூப் தளத்தில் வெளியான பாடல் 'மூப்பில்லா தமிழேதாயே'. கடந்த மார்ச் 24 ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இப்பாடல் முதன் முதலில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது யூ ட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

'புயல் தாண்டியே விடியல்...' என்ற வரியில் தொடங்கி தமிழருடைய கலாச்சாரம், தொன்மை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ள தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ், ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார், நகுல் அய்யங்கர் மற்றும் பூவையார் ஆகியோர் பாடியுள்ளனர். தாமரை வரிகளை எழுதியுள்ளார். அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று யூ டியூபில் 1.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

Advertisment