Advertisment

"நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவுவதை உணர்கிறேன்" - ஏ.ஆர் ரஹ்மான்

ar rahman latest interview

Advertisment

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

திரைப்படங்களுக்கிடையே இசை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பேட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்திய பேட்டியில், தான் மதம் மாறியதைப் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக, ‘தி க்ளென் கவுல்டு ஃபவுண்டேஷன்’ (The Glenn Gould Foundation) யூட்யூப் சேனலில் அவர் கூறியது, "நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியபோது எந்தவித சமூகம் சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள் அனைத்து மதங்களையும் மிகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் நாங்கள் எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை.

இந்தியர்கள் மிகவும் திறந்த மனதோடு இருப்பவர்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் திறந்த மனப்பான்மையோடு இருப்பதை தாண்டி மிகவும் அரவணைப்போடும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். வாழு, வாழவிடு என்ற கோட்பாட்டின்படி வாழ்பவர்கள் ஆனால், அரசியல் சூழல் காரணமாக, சில ஆண்டுகளாக நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவுவதை உணர்கிறேன்" என்றுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான், இந்து மதத்தில் பிறந்து இஸ்லாமிய மதத்திற்கு தனது 20வது வயதில் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe