கெளதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைத்துள்ளது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' என இரு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. இந்த இரு படங்களிலும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியிருந்தார். படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜோஷ்வா' படத்தைத் தற்போது இயக்கி வரும் கெளதம் மேனன், அப்படத்தினை முடித்துவிட்டு சிம்பு படத்தின் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.