Advertisment

பார்த்திபன் படத்தில் ஏ.ஆர் ரஹ்மான்! ரசிகர்கள் உற்சாகம்! 

vbfbs

Advertisment

நடிகர், இயக்குநர் பார்த்திபன், சமீபத்தில் 'ஒத்த செருப்பு' என்ற வித்தியாசமான படத்தை இயக்கி, நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருந்தது. அதையும் பார்த்திபனே செய்திருந்தார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சென்ற ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்றது. சிறப்பு நடுவர் தேர்வுப் பிரிவில் தேசிய விருதை வென்ற 'ஒத்த செருப்பு' படத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து மழையில் நனையவைத்தனர்.

இப்படத்தை தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். ‘இரவின் நிழல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்படவுள்ளது. உலக அளவில் பலரும் முயற்சி செய்த இந்தப் பாணியை, முதன்முதலாக ஆசியாவில் நடிகர் பார்த்திபன் முன்னெடுக்கிறார். இந்நிலையில், ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக பார்த்திபன் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார். அதில்...

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!

Yes SIR is IN (Iravin Nizhal)

பெருமை!

அருமையில் - 3 பாடல்கள் கைவசம்

அருகாமையில் இன்னொன்று - promotional song

So...

So hhaappppyy" என பதிவிட்டுள்ளார்.

ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe