AR Rahman gives a surprise to the fans

Advertisment

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்குஇசையமைத்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு, இரவின் மடியில் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் சில படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளார்.இதனிடையே ரசிகர்கள் தங்கள் நடிகர் படங்களின்பாடல் குறித்தஅப்டேட்டைகேட்டு வந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b0155509-7375-47f3-952c-2cd65b32a6ae" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_48.jpg" />

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியதகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில்," வரும் டிசம்பர் மாதம் தமிழ் படத்தின் ஒரு சவுண்ட் ட்ராக் வெளியாகவுள்ளது. அது எந்த படத்துடையதுஎன்று உங்களால்யூகிக்கமுடிகிறதா,சர்ப்ரைஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment