/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/136_31.jpg)
சில்லுக் கருப்பட்டி, பூவரசம் பீப்பீ, ஏலேஉள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். இப்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரிக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை 7 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். அவர் திறமையான மனிதர் என்றும் சிறப்பான இசை வந்துகொண்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். கதீஜா ரஹ்மான், 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)