Advertisment

37 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற சர்ச்சை இயக்குநர்; ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

ar rahman congrats Ram Gopal Varma for he receives his B. Tech degree after 37 years

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனதுசமூக வலைத்தளப் பக்கத்தில்பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போதுசர்ச்சைகளாகமாறும். சமீபத்தில், ராஜமௌலிமீது இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் பொறாமையில் உள்ளதாகவும் அவரை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதனிடையே ஒரு டேஞ்சரஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகையின் கால் விரலை கடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்த படிப்பின் சான்றிதழை வாங்கியுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி.டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பட்டம் வாங்கியுள்ள ராம் கோபால் வர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ar rahman ram gopal varma
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe