Advertisment

ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

ar rahman concert in ipl 2024

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன், மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அன்று முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன. மார்ச்சை தொடர்ந்து, ஏப்ரல், மே வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.

Advertisment

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தோனி தலைமையிலான சென்னை அணி ஹோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Advertisment

இப்போட்டியினை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம் போல் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி அரங்கேறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்னணிபாடகர் சோனு நிகம், மற்றும் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

IPL ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe