Skip to main content

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி - ரசிகர்களுக்காக சிறப்பு வசதி

 

AR Rahman concert in Chennai  special facility for fans

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'அன்பின் சிறகுகள்' என்ற தலைப்பில் நாளை (19.03.2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். அவரது ஸ்டூடியோவில் கடந்த ஜனவரி மாதம் லைட் மேன் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்து போனார். அதனால் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 

நாளை இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடக்கவுள்ள இந்த இசை நிகழ்ச்சியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பங்குதாரரான மார்க் மெட்ரோ நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் நாளை மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. 

 

மேலும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவையும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்