
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில் 5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய இசை துறையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இவர் சினிமா மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை YMCA-யில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளார். முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி சதிஷ் தயாரிக்கிறார். இவர் மிக விரைவில் திரைக்கு வர உள்ள விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.