AR Rahman composing music for first female director

இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இந்திய மொழி படங்கள் மட்டும் அல்லது உலக நாட்டு மொழிகளில் சில படங்களில் பணியாற்றியுள்ளார். 'கலாட்டா கல்யாணம்' படத்திற்கு பிறகு தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'அயலான்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே மே 17-ஆம் தேதி பிரான்சில் தொடங்கவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இந்தியா சார்பாக செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் அரபு நாட்டு பெண் இயக்குநர் நயிலா அல் காஜா இயக்கும் படத்தில் இசையமைக்கவுள்ளார். அரபு நாட்டில் முதல் பெண் இயக்குநரான நயிலா அல் காஜா இயக்கும் 'பாப்' திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏ.ஆர் ரகுமானிடம் 'பாப்' படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

Advertisment