அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்?

ar rahman

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அட்லீ, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாக நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தப்படம் உறுதியாகிவிட்டதாகவும் அந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை இயக்குநர் அட்லீ தொடங்கிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அட்லீ - ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் மற்றும் பிகில் படத்தில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

atlee
இதையும் படியுங்கள்
Subscribe